Homeசெய்திகள்சினிமாகாசி கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம்

காசி கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம்

-

காசி கோயிலில் பிரபல நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்

நடிகை தமன்னா பான் இந்தியா அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக சினிமாத் துறையில் இருக்கும் தமன்னா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவ்வப்போது இந்த நடிகருடன் உறவில் இருக்கிறார் என்று செய்திகள் கிளம்பும். அந்த வகையில் சமீப காலமாக தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அண்மையில் தமிழில் வெளியான திரைப்படம் ஜெயிலர். அப்படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்ற படத்தில் தமன்னா நடித்துள்ளார். தென்னிந்திய சினிமா மட்டுமன்றி இந்தியிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் இரண்டு இணைய தொடர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.

தமிழ் மட்டுமன்றி தற்போது பாலிவுட்டிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மைக் காலமாக நடிகை தமன்னா அடுத்தடுத்து பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது காசி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ