தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இவர் நடனமாடியிருந்த காவாலா பாடல் வெளியானது. இந்தப் பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. பலரும் இந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகின்றனர். இந்த காவாலா பாடலின் மூலம் தமன்னாவும் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகிவிட்டார்.
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்காக படமானது முழு வீச்சில் தயாராகி வருகிறது. நடிகை தமன்னாவும் ஜெயிலர் திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது அந்தப் பிரமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமன்னாவிடம் சுறா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தமன்னா, “எனக்கு சுறா திரைப்படம் மிகவும் பிடிக்கும். பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. ஆனால் அதில் சில காட்சிகளில் நான் நன்றாக நடிக்கவில்லை என்று நினைத்தேன். அதுபோன்ற காட்சிகளை நான் திரும்பவும் நடிக்க மாட்டேன். படப்பிடிப்பு நேரத்திலேயே அந்த கதாபாத்திரம் சரியானது இல்லை என்று எனக்கு தெரியும். கமிட்டாகி விட்டேன் என்பதற்காகவே நடித்தேன்” என்று பதிலளித்துள்ளார்.