நாயகனாக அறிமுகமாகும் விக்ரமன் மகன்… திரைப்பிரபலங்கள் திரண்டு வாழ்த்து…
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் விக்ரமன். குடும்ப படங்கள் கொடுத்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றவர் விக்ரமன். தற்போது விக்ரமன் தனது மகன் விஜய் கனிஷ்காவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்கள் சூர்யகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இயக்குகின்றனர். படத்திற்கு ‘ஹிட்லிஸ்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், சித்தாரா, முனீஸ்காந்த், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரன், அனுபமா குமார் சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார். இயக்குனர் கௌதம் மேனன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது

இத்திரைப்படத்தின் இசை வௌியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன், கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, பேரரசு, கதிர், பி.வாசு, மிஷ்கின் உள்பட பலர் கலந்து கொண்டர். மேலும், நடிகர்கள் பார்த்திபன், பாக்யராஜ், ரமேஷ் கண்ணா, ஜெயம்ரவி, ஜீவா, சரத்குமார் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று விக்ரமன் மகனை வாழ்த்திச் சென்றனர். இதற்கு முன்பாக விஜய்,கமல் மற்றும் ரஜினிகாந்தை சந்தித்து படக்குழு வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.