- Advertisement -
பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்தவர் அடடே மனோகர். சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்த அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பணியின்போது கிடைத்த இடைவெளியில், நாடகங்களில் நடித்து வந்தார். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதில் பல நாடகங்களை அவர் எழுதி இயக்கி உள்ளார். மேடை நாடகங்களில் அவரே நேரடியாக பாடி நடிப்பது இவருக்கு கை வந்த கலையாகும். இது மட்டுமன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அடடே மனோகர் என்ற பெயரில் 1986-ம் ஆண்டு டிடி தொலைக்காட்சியில் நாடகம் ஒளிபரப்பானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து வெள்ளித்திரை பக்கமும் அவர் திரும்பினார். சுமார் 35-ம் மேற்பட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். நடிகர் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து நகைச்சுவே வேடங்களில் அவர் நடித்துள்ளார்.



