Homeசெய்திகள்சினிமாராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் இணையும் தமிழ் பட ஹீரோ!

ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் இணையும் தமிழ் பட ஹீரோ!

-

- Advertisement -

தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ராஜமௌலி.ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் இணையும் தமிழ் பட ஹீரோ! இவர் பாகுபலி 1, 2 ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதாவது இவருடைய படங்கள் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் தரமாக எடுக்கப்பட்டிருக்கும். பிரம்மாண்ட காட்சிகள், கதாபாத்திரங்களின் தேர்வு, இசை மற்றும் தொழில்நுட்பம் என அனைத்திலும் சிறந்த அனுபவத்தை வழங்கி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுவார். ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் இணையும் தமிழ் பட ஹீரோ!இவர் அடுத்ததாக மகாபாரத கதையை படமாக இயக்கப் போகிறார் என பல தகவல்கள் வெளியாகி வருகிறது. மகாபாரத கதையை பலரும் படமாக எடுத்திருந்தாலும் ராஜமௌலியின் மேக்கிங்கிற்காகவே அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இவர், மகேஷ் பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் மகேஷ் பாபு தவிர பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் இணையும் தமிழ் பட ஹீரோ!இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கப் போவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ