spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅரசியல் பேசும் தலைமைச் செயலகம்... வெப் தொடரின் முன்னோட்டம் ரிலீஸ்...

அரசியல் பேசும் தலைமைச் செயலகம்… வெப் தொடரின் முன்னோட்டம் ரிலீஸ்…

-

- Advertisement -
அரசியல் கதைக்களம் கொண்ட தலைமைச் செயலகம் என்ற தொடரின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நீண்ட இடைவௌிக்கு பிறகு அண்மையில் வசந்த பாலன் படம் இயக்கினார். அநீதி என்ற அத்திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடித்திருந்தார். அவருடன் துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

we-r-hiring
தற்போது இணைய தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். தலைமைச் செயலகம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருடன் ரம்யா நம்பீசன்,பரத், ஸ்ரேஷா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த இணைய தொடர் உருவாகி உள்ளது.

தலைமைச் செயலகம் தொடரின் முதல் தோற்றம் மற்றும் அதன் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தலைமைச் செயலகம் தொடரின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர் வரும் மே மாதம் 17-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

MUST READ