spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்களை சந்திக்கும் நெட்பிளிக்ஸ் சிஇஓ

தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்களை சந்திக்கும் நெட்பிளிக்ஸ் சிஇஓ

-

- Advertisement -
தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவரது மகனாக ராம்சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். ராஜமௌலி இயக்கிய மகதீரா என்ற திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல இயக்குநர்களுடன் இணைந்து மாஸ் திரைப்டங்களை கொடுத்தார். அண்மையில் ராம்சரண் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் தெலுங்கு திரையுலகம் மட்டுமன்றி உலக அளவிலும் ராம்சரணின் புகழை கொண்டு சேர்த்தது. இப்படத்தில் அவருடன் சேர்ந்து ஜூனியர் என்டிஆரும் நடித்திருந்தார்.

’ஆர்.ஆர்.ஆர்’ படம் வெளியான போது ஹாலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஜே ஜே ஏப்ரஹாம்ஸிடம் இருந்து ராம்சரணுக்கு விருந்து அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் இயக்குநர்கள் கெளன்சிலிடம் இருந்தும் அவருக்கு ஒரு சிறப்பு அழைப்பு வந்தது.

தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸின் உயர் அதிகாரியான டெட் ஸரண்டோஸை நடிகர் ராம்சரண் சந்தித்துள்ளார். இந்தியா வருகைத் தந்துள்ள டெட் ஐதராபாத்தில் விமானத்தை விட்டு இறங்கியதும் நேராக நடிகர் சீரஞ்சிவி மற்றும் ராம் சரண் குடும்பத்தினரை வீடு தேடி சென்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதைத் தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர். வீட்டிற்கும் நெட்பிளிக்ஸ் சிஇஓ டெட் சென்றுள்ளார். அங்கு ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது மனைவியை சந்தித்து நலம் விசாரித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது எனச் சொல்லப்பட்டாலும் நெட்ஃப்ளிக்சுடன் சிறப்புப் படங்களில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பதற்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

MUST READ