spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகையில் காயத்துடன் ரித்திகா சிங்... ரசிகர்கள் அதிர்ச்சி...

கையில் காயத்துடன் ரித்திகா சிங்… ரசிகர்கள் அதிர்ச்சி…

-

- Advertisement -

கையில் காயத்துடன் ரித்திகா சிங் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், தமிழில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானார். சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் மாதவன் நாயகனாக நடித்திருப்பார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ரித்திகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, குரு ஆகிய திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அசோக் செல்வனுடன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அண்மையில் அவரது நடிப்பில் கொலை என்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில், ரஜினி நடிக்கும் 170-வது படத்தில் ரித்திகா சிங் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
we-r-hiring

இந்நிலையில், கையில் காயத்துடன் ரித்திகா சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் தன்னை எச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். கண்ணாடி இருக்கிறதாக சொன்னார்கள். ஆனால், அது எல்லாம் நடப்பது தான். சில நேரங்களில் கண்ட்ரோல் செய்ய முடியாது தானே. கண்ட்ரோல் இழந்து விட்டதால், இப்படி நடந்துவிட்டது எனக்கூறி அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

MUST READ