- Advertisement -
ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்குகிறது.
ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. அண்மையில் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஜெயிலர் வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிகாந்தின் 170வது திரைப்படமாகும். வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரளங்களில் நடித்திருக்கின்றனர்.
