தளபதி என்று ரசிகர்களை கொண்டாடப்படும் விஜய் இன்றுடன் (டிசம்பர் 4) திரைத்துறையில் 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 1992 ஆம் ஆண்டில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். எஸ் ஏ சந்திரசேகர் தனது மகன் விஜயை திரைத்துறையில் அறிமுகப்படுத்துவதற்காக பல இயக்குனர்களை அனுப்பிய போதும் ஒருவருமே விஜயை இயக்க முன்வரவில்லை. இறுதியில் விஜயை தன்னுடைய இயக்கத்திலேயே நடிக்க வைத்தார் எஸ்.ஏ. சந்திரசேகர். அதன்படி நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நடித்ததால் நடிகர் விஜய் பல்வேறு கிண்டலுக்கும் கேளிக்கும் ஆளானார். இருப்பினும் தொடர்ந்து எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய படங்களில் விஜய் ஹீரோவாக களம் இறக்கினார். ஆனாலும் ஆரம்பகட்டத்தில் விஜயை ரசிகர்கள் பலரும் இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று அவரை ஒரு நடிகராகவே ஏற்றுக்கொள்ளாமல் கிண்டலடித்து வந்தனர். அப்போதுதான் கடந்த 1996 இல் வெளியான பூவே உனக்காக படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் அதை தொடர்ந்து விஜயை ஒவ்வொருவரும் கொண்டாட ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து இளைய தளபதி என்ற பட்டத்தை பெற்றார் விஜய். சென்டிமென்ட் , ஆக்சன், காதல் என அனைத்திலும் பின்னி பெடலெடுத்தார் விஜய். இவ்வாறு தனக்கென அடையாளத்தை உருவாக்கி அதை தனக்கான சாம்ராஜ்யமாகவே மாற்றினார் விஜய்.
தற்போது இவர் திரைத்துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஒரு அரசியல்வாதியாகவும் உருவெடுத்துள்ளார். ரசிகர்கள் பலரும் விஜயை ஒரு நடிகராக கொண்டாடி தீர்த்த நிலையில் தற்போது அரசியல்வாதியாகவும் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் தளபதி 69 படம் தான் விஜயின் கடைசி படம் என்று அவர் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. ஆனாலும் ‘நாளைய தீர்ப்பு‘ என்ற படத்தில் அறிமுகமாகி மக்களின் நாளைய தீர்ப்பை எதிர்நோக்கும் ஆளுமையாகவும் மாறியுள்ள விஜய்க்கு பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் திரைத்துறையில் அறிமுகமாகி இன்றுடன் 32 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு ஸ்பெஷல் வீடியோ, மற்றும் போஸ்டர்கள் தயார் செய்து விஜயின் 32 ஆண்டு சினிமா பயணத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருவதோடு 32 years Of Vijayism என்ற ஹேஷ் டேக்கையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.