Homeசெய்திகள்சினிமாரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்த 'தங்கலான்' 2வது பாடல்.... அடுத்தது பிரீ ரிலீஸ் ட்ரெய்லர் தான்!

ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்த ‘தங்கலான்’ 2வது பாடல்…. அடுத்தது பிரீ ரிலீஸ் ட்ரெய்லர் தான்!

-

நடிகர் விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்த 'தங்கலான்' 2வது பாடல்.... அடுத்தது பிரீ ரிலீஸ் ட்ரெய்லர் தான்!மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஆனால் இந்த படமானது பல வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதே சமயம் நடிகர் விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்த 'தங்கலான்' 2வது பாடல்.... அடுத்தது பிரீ ரிலீஸ் ட்ரெய்லர் தான்!கிஷோர் குமார் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடிக்க படத்தின் வில்லனாக டேனியல் கால்டகிரோன் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோலார் தங்க சுரங்கத்தில் வேலை செய்வதற்காக அடிமைப்படுத்தப்படும் தமிழர்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதை தொடர்ந்து படத்தின் முதல் படத்தின் முதல் பாடல் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்த 'தங்கலான்' 2வது பாடல்.... அடுத்தது பிரீ ரிலீஸ் ட்ரெய்லர் தான்!அதன் பின்னர் நேற்று வெளியான ‘லானே தங்கலானே’ எனும் பாடல் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படமானது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பிரீ ரிலீஸ் ட்ரெய்லர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி தங்கலான் படத்தின் பிரீ ரிலீஸ் ட்ரெய்லர் குறித்து அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகும் எனவும் ரிலீஸ் ட்ரெய்லர் வருகின்ற ஆகஸ்ட் 8 வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ