Homeசெய்திகள்சினிமாதங்கலான் பட பாடல் லீக்... மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் பாடிய ஜிவி....

தங்கலான் பட பாடல் லீக்… மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் பாடிய ஜிவி….

-

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரும், தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் காட்ட முயலும் இயக்குநர் பா ரஞ்சித். அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த பா ரஞ்சித், முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ஒரு மதில் சுவரும், அதை சுற்றி நடக்கும் அரசியலையும் அசராமல் திரையில் காட்டி ரசிகர்களை அசரடித்தார். இதையடுத்து, ரஜினியை வைத்து காலா மற்றும் கபாலி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களை எடுத்தார். இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் பா ரஞ்சித் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறஆர். மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைக்கிறார். கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் னுபவிக்கும் கொடுமைகளை மையமாகக் கொண்டு தங்கலான் திரைப்படத்தில் கதை அமைந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னையில் நடந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில், இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தங்கலான் படத்தின் டைட்டில் பாடலை பாடி அசத்தியுள்ளார். லானு தங்கலானு என்ற இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.

MUST READ