spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅது இன்னொரு பெரிய சம்பவம்.... அத இப்ப சொல்லக்கூடாது... 'குட் பேட் அக்லி 2' குறித்து...

அது இன்னொரு பெரிய சம்பவம்…. அத இப்ப சொல்லக்கூடாது… ‘குட் பேட் அக்லி 2’ குறித்து பிரபல நடிகர்!

-

- Advertisement -

அஜித்தின் 63வது படமான குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 அன்று திரைக்கு வந்தது. ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகி இருந்தது.அது இன்னொரு பெரிய சம்பவம்.... அத இப்ப சொல்லக்கூடாது... 'குட் பேட் அக்லி 2' குறித்து பிரபல நடிகர்!படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க மகனாக கார்த்திகேயன் தேவ் நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். மேலும் பிரசன்னா, சுனில், பிரபு பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோரும் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.அது இன்னொரு பெரிய சம்பவம்.... அத இப்ப சொல்லக்கூடாது... 'குட் பேட் அக்லி 2' குறித்து பிரபல நடிகர்! அதே சமயம் பழைய பாடல்கள், அஜித் ரெபரன்ஸ் போன்றவையும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அடுத்தது இந்த படம் வெளியான முதல் நாளில் மட்டும் 30.9 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் குட் பேட் அக்லி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஏகே 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார் என்று ஹின்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அது குட் பேட் அக்லி இரண்டாம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அது இன்னொரு பெரிய சம்பவம்.... அத இப்ப சொல்லக்கூடாது... 'குட் பேட் அக்லி 2' குறித்து பிரபல நடிகர்!இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகர் கார்த்திகேயா தேவ் கலந்து கொண்டார். அவரிடம் குட் பேட் அக்லி 2 குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அப்படி குட் பேட் அக்லி 2 படம் வந்தால் அது இன்னொரு பெரிய சம்பவம்” என்று பதிலளித்துள்ளார். மேலும் கே ஜி எஃப் 3 படத்தில் அஜித் நடிக்கப் போகிறாரா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அதை இப்ப சொல்ல கூடாது…எனக்கு தெரியாது” என்று மழுப்பலான பதில் அளித்திருந்தார்.

MUST READ