Homeசெய்திகள்சினிமாதனது உயிர் தோழியை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல இளம் நடிகர்!

தனது உயிர் தோழியை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல இளம் நடிகர்!

-

நடிகர் கிஷன் தாஸ் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர். இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தனது உயிர் தோழியை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல இளம் நடிகர்!அதைத்தொடர்ந்து முதல் நீ முடிவும் நீ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்தார். அதைத் தொடர்ந்து சிங்க் எனும் ஹாரர் படத்தில் நடித்துள்ளார். அதேசமயம் தேஜாவு பட இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் தருணம் படத்தில் நடித்திருக்கிறார் கிஷன் தாஸ். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது உயிர் தோழியை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல இளம் நடிகர்!அதாவது கிஷன் தாஸ், நீண்ட நாட்களாக தனது தோழி சுசித்ராவை காதலித்து வந்ததாகவும் தற்போது இருவரின் நிச்சயதார்த்தம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்து முடிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கிஷன் தாஸ் , சுசித்ரா இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொள்ளும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது உயிர் தோழியை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல இளம் நடிகர்!மேலும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ