spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் ஹாரர் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

மீண்டும் ஹாரர் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

-

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.மீண்டும் ஹாரர் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்! அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் , விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துவரும் படை தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே லோகேஷ் கனகராஜிடம் கதாசிரியராக பணிபுரிந்த ரத்தினகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் ரத்னகுமார் சமீபத்தில் ரஜினிக்கு எதிராக செய்தவை ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ்க்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்க வா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தார் ராகவா லாரன்ஸ். ஆனால் தற்போது லோகேஷ், ராகவா லாரன்ஸிடம் பேசி அவரை ஒப்புக்கொள்ள வைத்துவிட்டார்.மீண்டும் ஹாரர் படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்! எனவே இந்த படத்தின் பிரீ ப்ரோடுக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் லோகேஷ் கனகராஜின் கதையிலும் தயாரிப்பிலும் உருவாக உள்ளது. மேலும் படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது. அதே சமயம் இந்த படம் ஹாரர் கலந்த கதை களத்தில் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, சந்திரமுகி 2 ஆகிய படங்கள் ஹாரர் படமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ