Homeசெய்திகள்சினிமாஸ்டார் படத்தால் பிரிந்த நட்பு.... மீண்டும் சேருமா 'பியார் பிரேமா காதல்' பட காம்போ?

ஸ்டார் படத்தால் பிரிந்த நட்பு…. மீண்டும் சேருமா ‘பியார் பிரேமா காதல்’ பட காம்போ?

-

- Advertisement -

பியார் பிரேமா காதல் பட காம்போ மீண்டும் இணைய போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பியார் பிரேமா காதல் எனும் திரைப்படம் வெளியானது. ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தினை இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். ஸ்டார் படத்தால் பிரிந்த நட்பு.... மீண்டும் சேருமா 'பியார் பிரேமா காதல்' பட காம்போ?யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், இளன் ஆகியோரின் கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைய போவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி அந்த படத்திற்கு ஸ்டார் என்றும் தலைப்பு வைக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஹரிஷ் கல்யாண் அந்த படத்தில் நடிக்காமல் போக அவருக்கு பதிலாக கவினை நடிக்க வைத்தார் இயக்குனர் இளன். இதனால் ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் ஆகிய இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஸ்டார் படத்தால் பிரிந்த நட்பு.... மீண்டும் சேருமா 'பியார் பிரேமா காதல்' பட காம்போ?இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் இயக்குனர் இளன், ஹரிஷ் கல்யாணை தொடர்பு கொண்டு லப்பர் பந்து படத்திற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார். எனவே இவர்களின் நட்பு மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது. ஆகையினால் இளன் – ஹரிஷ் கல்யாண் காம்போவில் புதிய படம் உருவாகும் என்றும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.

MUST READ