தி கோட் நாயகியின் கலக்கல் புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்…
- Advertisement -
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் மீனாட்சி சௌத்ரி. தெலுங்கில் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், கடந்த 2023-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்த கொலை திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். இதற்கு முன்பாக தமிழில் அவரது நடிப்பில் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியானது. இதில் ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
மேலும், தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் இறுதியாக வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் அவர் துல்கருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மீனாட்சி சௌத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.