spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தி கோட்' படத்தின் முதல் பாடல் அறிவிப்பு..... உற்சாகத்தில் ரசிகர்கள்!

‘தி கோட்’ படத்தின் முதல் பாடல் அறிவிப்பு….. உற்சாகத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் (THE GREATEST OF ALL TIME) படத்தில் நடித்து வருகிறார். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
'தி கோட்' படத்தின் முதல் பாடல் அறிவிப்பு..... உற்சாகத்தில் ரசிகர்கள்!இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் லைலா சினேகா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்த்தனர். அதே சமயம் இந்த படத்தில் நடிகை திரிஷா பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

we-r-hiring

அதன்படி இந்த படத்தின் முதல் பாடல் நாளை தமிழ் புத்தாண்டு தினத்தன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள நிலையில் முதல்முறையாக யுவன் இசையில் நடிகர் விஜய் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் 2024 செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

MUST READ