Homeசெய்திகள்சினிமா'தி கோட்' படத்தின் அட்டகாசமான போஸ்டர்.... ட்ரெய்லர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

‘தி கோட்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர்…. ட்ரெய்லர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

-

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படம் விஜயின் 68 வது படமாகும்.'தி கோட்' படத்தின் அட்டகாசமான போஸ்டர்.... ட்ரெய்லர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு! இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சித்தார்த்தா நுனி படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நடிகர் விஜய் இந்த படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா, திருவனந்தபுரம், இலங்கை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'தி கோட்' படத்தின் அட்டகாசமான போஸ்டர்.... ட்ரெய்லர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!இருப்பினும் படத்தின் டிரைலரை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என பட குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி வருகின்ற (ஆகஸ்ட் 17) நாளை மாலை 5 மணி அளவில் தி கோட் படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

MUST READ