- Advertisement -
விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய திரையுலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்து அதில் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே கொண்டிருப்பவர் தளபதி விஜய். குட்டி சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கோலிவுட் மட்டுமன்றி டோலிவுட், சாண்டல்வுட், மோலிவுட் என விஜய்க்கு அனைத்து திரையுலகிலும் ரசிகர்கள் ஏராளம். விஜய் நடிப்பில் வௌியான லியோ படம் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான லியோ, சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய ஹிட் அடித்தது.


இதைத் தொடர்ந்து விஜய் தனது 68-வது படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்குகிறார். கல்பாத்தி அகோரம் படத்தை இயக்குகின்றனர். மேலும், படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பது படத்திற்கான எதிர்பார்ப்பைஅதிகரித்துள்ளது. படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரேம்ஜி உள்பட வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நாயர்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

