Homeசெய்திகள்சினிமாடெல்லி படப்பிடிப்பு நிறைவு... சென்னை பறக்கும் தக் லைஃப் குழு...

டெல்லி படப்பிடிப்பு நிறைவு… சென்னை பறக்கும் தக் லைஃப் குழு…

-

நாயகன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மீண்டும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமலுடன் இணைந்து த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்புவும், ஜெயம்ரவிக்கு மாற்றாக அசோக் செல்வனும் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவி.கே.சந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன. இந்தி நடிகர்கள் அலி ஃபஸல், பங்கஜ் திரிபாதி ஆகியோர் இணைந்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது. அங்கு சிம்பு மற்றும் கமல்ஹாசன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டன. சிம்புவின் முதல் தோற்ற வீடியோவையும் படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், தக் லைஃப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு, சென்னையில் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 30 நாட்கள் டெல்லி மற்றும் ஜெய்சல்மரியில் நடைபெற்ற இப்படப்பிடிப்பில் நடிகர் சிம்பு இடைவெளி இல்லாமல் நடித்ததாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருவதால், படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

MUST READ