spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜர்பைஜானில் ஆர்யா... மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு தீவிரம்...

அஜர்பைஜானில் ஆர்யா… மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு தீவிரம்…

-

- Advertisement -
ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

we-r-hiring
தமிழ் ரசிகர்களாலும், திரையுலகினராலும் சார்மி என அன்புடன் அழைக்கப்படும் சாக்லேட் பாய் நடிகர் ஆர்யா. 2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் ஆர்யா. இதைத் தொடர்து கலாபக் காதலன், பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, இப்படி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கியிருப்பார். குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளியானது.

இத்திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருப்பார். மேலும், பசுபதி, முத்து குமார், ஜான் கொக்கேன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஆர்யா நடித்த எனிமி, கேப்டன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தற்போது, ஆர்யா இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை 2-ம் பாகம் மற்றும் மிஸ்டர் எக்ஸ் படத்திலும் நடிக்கிறார். எஃப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் மிஸ்டர் எக்ஸ் படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியார், கௌதம் கார்த்திக், அனகா உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ