சூர்யா – ஜோதிகா விவாகரத்து விவகாரம்… வதந்திக்கு முற்றுப்புள்ளி…
- Advertisement -

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. 90-களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த உயிரிலே கலந்தது, பூவெல்லாம் கேட்டுப்பார் மாயாவி, பேரழகன், சில்லனு ஒரு காதல், காக்க காக்க ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட் அடித்தன. இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால், இடைவெளிக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக அவர் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் ஜாக்பாட், பொன்மகள், மகளிர் மட்டும், ராட்சசி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமன்றி மலையாளம், இந்தி படங்களிலும் கமிட்டாகி நடிக்கிறார். தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பிரிந்துவிட்டதாகவும், தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்தி படங்களில் நடிப்பதற்காக தன் குழந்தைகளுடன் ஜோதிகா மும்பை சென்று விட்டதாகவும், அங்கு அவர்கள் படிப்பதாகவும், சென்னையில் இருந்தால் குழந்தைகளின் படிப்பு தான் இல்லாமல் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பிரிந்து வாழ்வதாக வதந்திகள் பரவின. ஆனால், அண்மையில் இருவரும் பின்லாந்து சென்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவர்கள் ஒற்றுமையாக இருப்பது தெரியவந்தது. மேலும், வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.