‘கங்குவா’ படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, VOLUME-ஐ 2 புள்ளிகள் குறைக்கச் சொல்லி திரையரங்கு உரிமையாளர்களிடம் கூறியுள்ளோம்’’ என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக தயாராகும் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போகும் போது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். இந்தப்படத்தின் ரிலீசுக்கு முன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ‘‘கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூலிக்கும்’’ எனத் தெரிவித்தார். ஆனால், கங்குவா திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இப்படத்திற்கு அதிகப்படியான நெகடிவ் விமர்சனங்கள் வர காரணம் அதன் திரைக்கதை மற்றும் இசை தான். இசை மிகவும் இறைச்சலாக உள்ளதாகவும், உப்பு சப்பு இல்லாத திரைக்கதையும் தான் கங்குவா படத்தின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் கங்குவா படம் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், அப்படத்தை போல் தன்னிடம் மேலும் 6 கதைகள் இருப்பதாக இயக்குனர் சிறுத்தை சிவா பேட்டி ஒன்றில் பேசி உள்ளது மிகவும் வைரலாகி வருகிறது.
“சினிமாவில் எனக்கு இரண்டு விஷயம் உடன்பாடு இல்லை. ஒன்று எனக்கு கம்பேரிசன் பிடிக்காது. மற்றொன்று எனக்கி அழுத்தம் கொடுத்தால் பிடிக்காது. வாழ்க்கையில் நான் எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவேன். என்னோட நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேறி இருக்கிறது. என்னுடைய கெரியரில் எனக்கு ரொம்ப பிடிச்ச ஜனரஞ்சகமான திரைப்படங்களை நான் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்கிறேன். அதுவும் வெற்றிப்படங்களாக அமைகிறது.
தற்போது எனக்கு பெரிய பட்ஜெட் படங்கள் பண்ண வேண்டும் என ஆசை வந்திருக்கிறது. அதனால் கங்குவா பண்ணி உள்ளேன். நாளை எனக்கி சயின்ஸ் பிக்சன் படம் பண்ணனும்னு ஆசை இருந்தால் அதையும் பண்ணுவேன். என்னை பொறுத்தவரை ஒரு டைரக்டருக்கு ஒரு ஜானர் தான் என பிக்ஸ் பண்ண முடியாது. இதுவரை ஜனரஞ்சகமா படம் எடுத்து அதை வெற்றிகரமாக பண்ணினேன். இப்போ பீரியட் பிலிம் பண்ணிருக்கேன். ஒரு இயக்குனராக எனக்கு எல்லா ஜானரும் பண்ண முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு மிகவும் அதிகமா இருக்கு.
எனக்கு மனித உறவுகளையும் எமோஷன்களையும் மையமாக வைத்து படங்கள் பண்ணுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏனெனில் கால காலத்துக்கு இது மாறாது. நாம் உலகத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் இறுதியாக நாம் உழைப்பது குடும்பத்திற்காக தான். பேமிலி ஜானரில் படம் பண்ண ரொம்ப பிடிக்கும். அதே சமயம் புதுப்புது ஜானரில் படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை எனக்குள் எப்போதுமே இருக்கும். கங்குவா கதை என் மைண்ட்ல இருந்தது. அதற்கான சரியான சூழ்நிலை அமைந்ததால் அதை பண்ணி உள்ளேன். என்னிடம் கங்குவா மாதிரியே 5-6 ஸ்கிரிப்ட் இருக்கு. அனைத்துமே வெவ்வேறு ஜானரில், ரொம்ப விறுவிறுப்பான கதைகள். கடவுள் அருள் இருந்தால் அடுத்தடுத்து அதை படமாக எடுப்பேன்” என கூறி இருக்கிறார்.