Homeசெய்திகள்சினிமாஅனைவரும் பைத்தியம்... கடுப்பான இயக்குநர் கிருத்திகா உதயநிதி...

அனைவரும் பைத்தியம்… கடுப்பான இயக்குநர் கிருத்திகா உதயநிதி…

-

மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்த வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரை உலகில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் கிருத்திகா உதயநிதி. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்கி புகழ் பெற்றார். இதில், காளிதாஸ் ஜெயராம், தன்யா, கருணாகரன், கௌரி கிஷன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இதில் ஜெயம்ரவி மற்றும் பிரபல மலையாள நடிகை நித்யா மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட, ஜாபர் சாதிக் தயாரித்த மங்கை திரைப்படத்தின் முதல் தோற்றத்தை கிருத்திகா வெளியிட்டிருந்தார். இதை வைத்து சில சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதுகுறித்து கிருத்திகா, பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பதிவிட்டுள்ளார். அதில், அனைவரும் கொஞ்சம் பைத்தியம் ஆகிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ