spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போன 'திரு. மாணிக்கம்' .... சமுத்திரக்கனியின் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்!

தள்ளிப்போன ‘திரு. மாணிக்கம்’ …. சமுத்திரக்கனியின் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்!

-

- Advertisement -

தள்ளிப்போன 'திரு. மாணிக்கம்' .... சமுத்திரக்கனியின் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்!சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். அந்த வகையில் இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ராம்சரணின் கேம் சேஞ்சர், வணங்கான் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் ராஜா கிளி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தள்ளிப்போன 'திரு. மாணிக்கம்' .... சமுத்திரக்கனியின் இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்!வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இறுதியாக வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி நடித்திருக்கும் திரு. மாணிக்கம் திரைப்படமும் அதை நாளில் (டிசம்பர் 27) திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எமோஷனல் கலந்த திரில்லர் படமான திரு. மாணிக்கம் திரைப்படத்தினை நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். ஜி பி ஆர் கே சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க விஷால் சந்திரசேகர் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஏற்கனவே டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

we-r-hiring

ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த படத்தின் ரிலீஸ் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. எனவே ஒரே நாளில் சமுத்திரக்கனியின் இரண்டு திரைப்படங்களும் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ