தளபதி 69 படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக வலம் வருகிறார். இவர் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதன்படி கோட் படத்திற்கு பிறகு தளபதி 69 படம் தொடர்பான முன்னணி வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கப் போவதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் போஸ்டர்களை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் தளபதி 69 படத்தில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை கடந்து தற்போது பிரபல இயக்குனர் ஒருவர் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை. கௌதம் வாசுதேவ் மேனன் தான். லியோ படத்திற்கு பிறகு விஜய் – கௌதம் மேனன் கூட்டணி தளபதி 69 படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கௌதம் மேனன், தளபதி 69 திரைப்படத்தில் நடிப்பார் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இருப்பினும் இவர் இப்படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் நாளை (அக்டோபர் 4) தளபதி 69 படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு அக்டோபர் 5ல் தொடங்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.