spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ்.... ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட 'கூலி' படக்குழு!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ்…. ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ‘கூலி’ படக்குழு!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜன் பிறந்த நாளை முன்னிட்டு கூலி படக்குழு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அதன்படி மாநகரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் கைதி படத்தின் மூலம் நல்ல பெயரையும் புகழையும் பெற்றார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ்.... ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட 'கூலி' படக்குழு!அதை தொடர்ந்து இவர் மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கிய ட்ரெண்டிங் இயக்குனராக உருவெடுத்தார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதிலும் தற்போது இவர், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி அமைத்து ‘கூலி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ரூ. 1000 கோடி வசூல் செய்யும் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அடுத்தடுத்த படங்களை தனது ஜி-ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார் லோகேஷ்.

we-r-hiring

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இன்று (மார்ச் 14) தன்னுடைய 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ