spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்.... 'தி ராஜா சாப்' பட மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரல்!

பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்…. ‘தி ராஜா சாப்’ பட மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் தி ராஜா சாப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட்.... 'தி ராஜா சாப்' பட மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரல்!

நடிகர் பிரபாஸ் கடைசியாக கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை நாக் அஸ்வின் இயக்கியிருந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சலார் 2, ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பிரபாஸ். இதற்கிடையில் நடிகர் பிரபாஸ், மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு, ரித்தி குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திக் பழனி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். காமெடி கலந்த ஹாரர் திரில்லர் படமாக உருவாகும் இப்படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

we-r-hiring

இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரபாஸின் 45வது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 23) அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தி ராஜா சாப் பட மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

MUST READ