Homeசெய்திகள்சினிமாவிஜயின் 'GOAT' படத்தில் நடிக்கும் திரிஷா?

விஜயின் ‘GOAT’ படத்தில் நடிக்கும் திரிஷா?

-

நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். விஜயின் GOAT படத்தில் நடிக்கும் திரிஷா?அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடின உழைப்பினால் தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்ற திரிஷா, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து மீண்டும் ஒரு ரவுண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் 6வது முறையாக நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை திரிஷா, ஏற்கனவே விஜயுடன் இணைந்து கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர்களின் காம்பினேஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து ஐந்தாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படத்திலும் நடிகை திரிஷா விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். விஜயின் GOAT படத்தில் நடிக்கும் திரிஷா?அன்று முதல் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடிகளில் ஒன்று விஜய் – திரிஷா. இந்த ஜோடி திரையில் தோன்றினால் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகை திரிஷா 6வது முறையாக GOAT படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளாராம். அதாவது திரிஷா இந்த படத்தில் கேமியா ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் GOAT படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் திரிஷாவின் கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இத்தகவலை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

MUST READ