நடிகை திரிஷா தற்போது பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அதன்படி விஜய், அஜித் உடன் இணைந்து மீண்டும் ஒரு ரவுண்டு நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் திரிஷா நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் தீயாய் பரவி வருகின்றன. அதாவது நடிகை த்ரிஷா ஏற்கனவே விஜயுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நிலையில் ஐந்தாவது முறையாக லியோ படத்தில் நடித்திருந்தார். தற்போது ஆறாவது முறையாக கோட் படத்தில் நடிக்க உள்ளார். அதுவும் திரிஷா இந்த படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு விஜயுடன் நடனமாட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே திரிஷாவை ஷாருக்கான் படத்தில் குத்து பாட்டுக்கு நடனமாட கேட்டிருந்தார்களாம். ஆனால் அதற்கு நோ சொன்ன திரிஷா தற்போது விஜய்காக கோட் படத்தில் நடனமாட ஒப்புக்கொண்டுள்ளாராம்.
இந்தப் பாடலின் படப்பிடிப்பு விரைவில் பிரசாத் ஸ்டூடியோவில் தொடங்கப்பட இருக்கிறதாம். மேலும் குண்டூர் காரம் படத்தில் நடந்த இயக்குனராக பணியாற்றிய சேகர் தான் இந்த படத்திற்கும் நடன இயக்குனராக பணியாற்றுகிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆகையால் தமன்னாவின் காவாலா பாடலைப் போல் திரிஷாவின் இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -