spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇளையராஜா இசையால் வளர்ந்தேன்... தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி...

இளையராஜா இசையால் வளர்ந்தேன்… தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி…

-

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் இசையால் வளர்ந்தே என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இளையராஜா இசையால் வளர்ந்தேன்... தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி...தமிழில் சிங்கம், உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள அவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்குக்கு இசை அமைத்திருக்கிறார். தெலுங்கில் டாப் நடிகர்கள் அனைவரின் படத்திற்கும் அவர் பணியாற்றி இருக்கிறார். அண்மையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பாபடத்திற்கு தேவி ஸ்ரீ இசை அமைத்திருந்தார்.

we-r-hiring

இப்படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் புஷ்பா இரண்டாம் பாகத்திற்கு அவர் இசை அமைத்து வருகிறார். மேலும், சூர்யா நடிக்கும் கங்குவா படத்திற்கும் அவர் இசை அமைத்து வருகிறார். இந்நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் சென்னையில் புதிய மியூசிக் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்த ஸ்டுடியோவுக்கு இசை அமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

மேலும் இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், இளையராஜா இசையையும், என்னையும் பிரிக்க முடியாது. சிறு குழந்தையாக இருந்தது முதல் அவரின் இசையால் தான் வளர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்த இசைஞானி இளையராஜாவின் இசை எனக்குள் ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியது. நான் எப்போதும் என்னைச் சுற்றி அவரது இசை இருப்பதை உணர்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

MUST READ