நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தினை திரும்ப பெற்றுள்ளார். சவுத் குயின் என்று அழைக்கப்படும் திரிஷா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அருண் வசீகரன் இயக்கத்தில் தி ரோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி வெளியாக இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, 40 வயதாகும் திரிஷாவிற்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் நடிகை திரிஷாவின் திருமணம் குறித்த செய்திகள் கடந்த சில தினங்களாக வெளியாகி வருகிறது. அதன்படி திரிஷா மலையாளத் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவி வந்தது. இந்த தகவல் உண்மையா? பொய்யா? எதை நம்புவது என தெரியாமல் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்தனர்.
DEAR “YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM”,
“KEEP CALM AND STOP RUMOURING”
CHEERS!— Trish (@trishtrashers) September 21, 2023

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திரிஷா தற்போது இது சம்பந்தமாக தன்னுடைய விளக்கத்தை தெரிவித்துள்ளார். அதன்படி தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்களும் உங்கள் குழுவும் யார் என்பது உங்களுக்கே தெரியும். அமைதியாக இருங்கள் வதந்தியை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் திரிஷாவின் திருமணம் தொடர்பாக வெளியான தகவல்கள் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
