Homeசெய்திகள்சினிமாஎப்போமே நான் பியூட்டி குயின் தான்… வரிசையாக படங்களை தட்டி தூக்கும் த்ரிஷா!

எப்போமே நான் பியூட்டி குயின் தான்… வரிசையாக படங்களை தட்டி தூக்கும் த்ரிஷா!

-

- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து தமிழ் திரையுலகில் திரிஷா தற்போது மீண்டும் ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்றுள்ளார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயுடன் இணைந்து ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களுக்கு இந்த கூட்டணி ஐந்தாவது முறையாக இணைந்துள்ளது. . இப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகி வருகிறது. மேலும் இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதையடுத்து, அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் திரிஷா, அருண் வசீகரன் இயக்கத்தில் AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் ‘தி ரோடு’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் திரிஷாவுடன் மியா ஜார்ஜ் எம் எஸ் பாஸ்கர் விவேக் பிரசன்னா உள்ளிட்டோ நடிக்கின்றனர். இப்படத்தில் சாம் சி எஸ் இசை அமைக்க வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திரிஷா ‘பிருந்தா’ எனும் வெப்சீரிஸில் நடிக்கிறார். இது இவர் நடிக்கும் முதல் வெப் சீரிஸ் ஆகும். இதை சூர்யா வாங்கலா இயக்குகிறார். இந்தத் தொடரின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இதில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் குறித்தும் இதன் வெளியீட்டு தேதி குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

திரிஷா, இந்த படங்களுக்கெல்லாம் முன்பாக நடிகர் அரவிந்த்சாமியுடன் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படத்தில் நடித்நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை விஜய் ஆண்டனியின் சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. அதன் பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை இப்படம் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.

இந்நிலையில் நடிகை திரிஷா, தூங்கா நகரம் இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இவ்வாறு பல படங்களை கைவசம் வைத்துள்ளார் த்ரிஷா!

MUST READ