- Advertisement -
மம்மூட்டி நடிக்கும் டர்போ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை, படக்குழு அறிவித்துள்ளது.
மோலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் மம்மூட்டி. மலையாள ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் மம்மூக்கா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கன்னூர் ஸ்குவாட். கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வௌியான திரைப்படம் பிரம்மயுகம்.
