spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'வாழை' படம் உங்களின் சிறந்த படைப்பு..... மாரி செல்வராஜை பாராட்டிய உதயநிதி!

‘வாழை’ படம் உங்களின் சிறந்த படைப்பு….. மாரி செல்வராஜை பாராட்டிய உதயநிதி!

-

- Advertisement -

மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

பரியேறும் பெருமாள் கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். அரசியலில் சாதிய ஒடுக்கு முறைகள் குறித்து பேசப்பட்ட திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு தரப்பினர் இடையே ஆதரவையும் பெற்று வருகிறது.

we-r-hiring

இதற்கிடையில் மாரி செல்வராஜ் வாழை எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது. இதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் வழங்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா, திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளஇந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழை திரைப்படம் உங்களின் சிறந்த படைப்பாக அமையும். மீண்டும் உங்கள் மேஜிக்கை காண காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ