Homeசெய்திகள்சினிமா'வாழை 2' படம் வரும்..... வெற்றி விழாவில் பேசிய மாரி செல்வராஜ்!

‘வாழை 2’ படம் வரும்….. வெற்றி விழாவில் பேசிய மாரி செல்வராஜ்!

-

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ், வாழை 2 திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.'வாழை 2' படம் வரும்..... வெற்றி விழாவில் பேசிய மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவர் தனது ஒவ்வொரு படங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை திரைக்கதையின் மூலம் படமாக கொண்டு வருபவர். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவர் வாழை எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. இப்படமானது கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மாரி செல்வராஜ், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய மாரி செல்வராஜ், “நான் இசை வழியாக வளர்ந்தவன். இசைதான் என்னுடைய பூர்வீகம். அதில் தான் நான் பிறக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருப்பதை படமாக எடுப்பதற்கு சந்தோஷ் நாராயணனும் முக்கிய காரணம். என்னுடைய குடும்பம் மற்றும் ஊர் மக்களின் கண்ணீரை கலையாக மாற்றிக் கொண்டு கோடிக்கணக்கான மக்களிடம் கடத்துவது எனக்கு போதும் என நினைத்தேன். வாழை திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை என்னால் கையாள முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தேன்.

அந்த அளவிற்கு பதற்றமாக இருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு என் வீடு தேடி வந்து பல பேர் என் கைகளை பற்றிக் கொண்டனர். இந்த படத்தை எடுத்ததன் மூலம் சாதி, மதம் பார்க்காமல் இஸ்லாமிய தோழர்கள் தான் அந்த மக்களை காப்பாற்றினார்கள் என்பதை வெளிக்கொண்டு வந்தது எனக்கு போதும். இன்றைக்கும் அதைப் பற்றி பேசுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மாரி செல்வராஜ் என்பவன் யார்? என்பதை மக்கள் தெரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட படம் தான் வாழை. இந்தப் படத்தில் அவர்களுக்கு சில குழப்பங்கள் இருந்தால் வாழை 2 திரைப்படம் வரும். அந்த படம் இன்னும் என்னை புரிந்து கொள்ள வைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ