Homeசெய்திகள்சினிமாமீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வடசென்னை பட நடிகை..... 'வாடிவாசல்' அப்டேட்!

மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வடசென்னை பட நடிகை….. ‘வாடிவாசல்’ அப்டேட்!

-

மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வடசென்னை பட நடிகை..... 'வாடிவாசல்' அப்டேட்!தமிழ் சினிமாவில் இனி வெளியாக உள்ள படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் வாடிவாசல். வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. படத்தின் ஷூட்டிங் வேலைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. அன்று முதல் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் குறைந்த பாடில்லை. மேலும் இப்படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. குறிப்பாக அவர் சூர்யாவின் மச்சான் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதுவும் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வடசென்னை பட நடிகை..... 'வாடிவாசல்' அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான வட சென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் அமீர் நடித்து மிரட்டி இருந்தார். இந்நிலையில் வாடிவாசல் படத்திலும் அமீர் நடிக்கிறார் என்றவுடன் அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பு எப்படி இருக்குமோ என்ற ஆர்வம் ரசிகர்களை தொற்றிக் கொண்டது. மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வடசென்னை பட நடிகை..... 'வாடிவாசல்' அப்டேட்!அதுமட்டுமின்றி தற்போது இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் நடிக்க இருக்கிறார் என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. இவரும் வடசென்னை படத்தில் அமீருடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தற்போது புறநானூறு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ