spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகை கால் செயலிழந்து போராடும் நகைச்சுவை நடிகர்... வடிவேலுவிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்...

கை கால் செயலிழந்து போராடும் நகைச்சுவை நடிகர்… வடிவேலுவிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்…

-

- Advertisement -
 
கோலிவுட் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த வெங்கல் ராவ், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் வெங்கல் ராவ். இவர், சினிமாவுக்குள் பைட்டராக நுழைந்தவர் ஆவார். ஒரு சண்டைக் காட்சியின்போது, ஏற்பட்ட காயத்தால் நடிப்பின் மீது ஆர்வம் செலுத்த தொடங்கினார். 1995-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் பிரபு நடித்த காட்டுமரக்காரன் என்ற படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார்.
இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கிய வெங்கல் ராவ், பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலான படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்து அசத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு இவர் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு ஆந்திர மாநிலத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அதிலிருந்து குணமடைந்த நடிகர் வெங்கல் ராவ் மீண்டும் தற்போது கை, கால் செயல் இழந்து மோசமான நிலையில் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது மருத்துவ சிகிச்சைக்கா, நிதியுதவி அளிக்குமாறு நடிகர் வெங்கல் ராவ், சக நடிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். இச்செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், உடன் நடித்த வடிவேலு இவருக்காவது உதவி செய்வாரா என பிரபல நடிகரும், திரைப்பட விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் இணையத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு முன்பாக நகைச்சுவை நடிகர் போண்டா மணியும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கும் வடிவேலு உதவி செய்யவில்லை என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

MUST READ