spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅருண் விஜயின் வலது கையில் பெரியார், இடது கையில் பிள்ளையார்....'வணங்கான்' பர்ஸ்ட் லுக் வெளியீடு!

அருண் விஜயின் வலது கையில் பெரியார், இடது கையில் பிள்ளையார்….’வணங்கான்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கி வரும் திரைப்படம் வணங்கான். பி ஹவுஸ் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் அருண் விஜயுடன் இணைந்து சமுத்திரக்கனி, மிஸ்கின், ரோஷினி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

we-r-hiring

அருண் விஜய் எப்போதும் கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்து வருபவர். தற்போது பாலா இயக்கத்தில் ஒரு வித்தியாசமான பரிமாணத்தில் அருண் விஜய் காணப்படுகிறார். இந்த போஸ்டரில் அருண் விஜய் உடல் முழுவதும் சேறு பூசி வலது கையில் கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரையும், இடது கையில் பிள்ளையாரையும் வைத்துள்ளார். இதன் மூலம் இந்த படம் கடவுள் சம்பந்தமான அல்லது மதம் தொடர்பான படமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ