வாரிசு படத்திற்கான வெளிநாட்டு உரிமை பல மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் படத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தின் அமெரிக்க, கனடா நாடுகளுக்கான தணிக்கை நடைபெற்றது. அதில் இப்படத்தை தணிக்கை குழுவினர் ரிஜெக்ட் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் முழுமையாக தயாராகாத காரணத்தால் அவர்கள் படத்தை ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்தசூழலில்அந்த நாடுகளை சேர்ந்த விநியோகஸ்தர்கள் ஒரே தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என தயாரிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரை தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் தமிழ் பதிப்பு மட்டும் வெளியாகிறது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெலுங்கு பதிப்பை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் அந்த பதிப்பும் இன்னும் தயாராக வில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான தணிக்கை வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக 11-ம் தேதி வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு அந்த ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் வேறு தேதியில்தான் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதன் காரணமாக வாரிசு திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா அல்லது தமிழ் பதிப்பை மட்டும் தமிழகம், கேரளா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெளியிடுவார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாவே உள்ளது. வாரிசு திரைப்படம் முதலில் 12 ஆம் தேதி வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். அதனால் ஏற்பட்ட குழப்பமே இதற்கெல்லாம் காரணம் என சொல்லப்படுகிறது.