பிரணவ் மோகன்லாலின் வர்ஷங்களுக்கு சேஷம்… ஓடிடி ரிலீஸ் அப்டேட்…
- Advertisement -

மலையாள திரையுலகில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹிருதயம். பிரேமம் படத்தை போல மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஹிருதயம் திரைப்படம் பிரபலம் அடைந்தது. இப்படத்தில் மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். தர்ஷனா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார்.

கேரளா, சென்னை இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹிருதயம் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்தது. வர்ஷங்களுக்கு ஷேஷம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பி தியான் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் நிவின் பாலி கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். மோகன்லாலுக்கும் இயக்குனர் வினித்தின் தந்தை ஸ்ரீனிவாசனுக்கும் இடையே உள்ள நட்பை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி உள்ளது.

இத்திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.இத்திரைப்படம் இன்று வரை திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றுதகவல் வெளியாகி உள்ளது.