மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கும் திரைப்படம் வர்ஷங்களுக்கு ஷேஷம். இந்தப் படத்தை ஹிருதயம் என்ற வெற்றி படத்தை கொடுத்த
இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், தியான் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் சிறப்பு தோற்றத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான நிவின் பாலி நடித்துள்ளார். ஹிருதயம் படத்திற்குப் பிறகு இணைந்துள்ள இந்த கூட்டணியினால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக நிலவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக பட குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் கதையானது மோகன்லாலுக்கும் இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசனின் தந்தை ஸ்ரீனிவாசனுக்கும் இடையே உள்ள நட்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் மோகன்லாலின் கதாபாத்திரத்தில் பிரணவ் மோகன்லாலும் ஸ்ரீனிவாசன் கதாபாத்திரத்தில் தியான் ஸ்ரீனிவாசனும் நடிக்கின்றனர்.
மேலும் இப்படம் 2024 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்றும் செய்திகள் பரவி வருகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.