Homeசெய்திகள்சினிமாடோலிவுட்டில் ஒரு கோலாகலம்… வருண் தேஜ், லாவண்யா திரிபாதி திருமண அப்டேட்!

டோலிவுட்டில் ஒரு கோலாகலம்… வருண் தேஜ், லாவண்யா திரிபாதி திருமண அப்டேட்!

-

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் திருமணம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் வருண் தேஜ் கொனிடேலா. இவர் நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்ய உள்ளார். வரும் நவம்பர் 1 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்ய உள்ளனர். இந்த ஜோடி இத்தாலியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் Theme Wedding செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் திருமணத்தில் தம்பதிகளின் குடும்பங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது. இத்தாலியில் திருமணத்தை அடுத்து ஹைதராபாத்தில் ஒரு பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை லாவண்யா பிறந்து வளர்ந்த டேராடூனில் மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனராம். .
வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி இந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
நடிகை லாவண்யா திரிபாதி தமிழில் சசிகுமார் உடன் ‘பிரம்மன்’ படத்தில் நடித்தார். அதையடுத்து ‘மாயவன்’ படத்தில் நடித்தார்.

MUST READ