Homeசெய்திகள்சினிமாதேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு நிறைவு... விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு...

தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு நிறைவு… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

- Advertisement -
விமல் நடிப்பில் உருவாகி வரும் தேசிங்கு ராஜா 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
 கடந்த 2013-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் தேசிங்கு ராஜா. இப்படத்தில் விமல் நாயகனாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக பிந்துமாதவி நடித்திருந்தார். படத்தில் சூரி, சிங்கம் புலி, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எழில் இப்படத்தை இயக்கினார். இரு குடும்பங்களுக்கு ஏற்பட்ட பரம்பரை பிரச்சனையை மிகவும் எதார்த்தமாக நகைச்சுவையாக காட்டியிருப்பர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை எடுத்து எழில் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இது எழில் இயக்கும் 25-வது திரைப்படமாகும். இதில் நடிகர் விமல் ஹீரோவாக நடிக்க, தெலுங்கு நடிகைகள் பூஜிதா, ஹர்ஷிதா ஆகியோர் நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜனா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மேலும், படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ