Homeசெய்திகள்சினிமாசெஃப் தாமுவை தாக்கி வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!

செஃப் தாமுவை தாக்கி வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!

-

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் செஃப், தாமு, செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவராக இருக்க, புகழ், பாலா, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக இருந்தனர். அனைவரையும் சிரிக்க வைத்து ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்து வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. செஃப் தாமுவை தாக்கி வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!இதற்கு முதல் நான்கு சீசன்களின் வெற்றியே அடையாளம். அடுத்ததாக குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் செஃப் வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருப்பதாக அறிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து செஃப் தாமுவும் வெளியேற இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இருவரும் இணைந்து வேறொரு புதிய நிகழ்ச்சியில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி அந்த புதிய நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் செஃப் தாமு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேற இருப்பதாக தாமு, தான் அறிவித்திருந்த வீடியோவை நீக்கினார். செஃப் தாமுவை தாக்கி வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!எனவே இது தொடர்பாக வெங்கடேஷ் பட் தனது பேஸ்புக்கில், பூனை கண் மூடிற்றால் உலகம் இருண்டு விடுமோ…… இணையத்தில் பதிவை நீக்கினால் உறைத்தது மறையுமோ….. இதனால் உமக்கு கிடைப்பது எதுவாயினும்….. மகிழ்ச்சி என்றும் எனக்கே….. சொல் தவறினாலும் நட்பு மாறாது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேசமயம் இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்கள் செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோரின் கூட்டணியில் அடுத்து வரவிருக்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் ஆக இருக்கக்கூடுமோ என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

MUST READ