spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் காலமானார்

வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் காலமானார்

-

- Advertisement -

வெண்ணிலா கபடி குழு திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45′ மணிக்கு உடல்நிலை குறைவால் காலமானார்.

நடிகர் மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 50. திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

we-r-hiring

கடந்த சில நாட்களுக்கு முன் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், தற்போது அதே படத்தில் நடித்த மாயியும் உயிரிழந்திருப்பது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ