spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா90 வயதில் பரதநாட்டியம்.. வைஜெயந்திமாலாவின் அசத்தல் வீடியோ வைரல்...

90 வயதில் பரதநாட்டியம்.. வைஜெயந்திமாலாவின் அசத்தல் வீடியோ வைரல்…

-

- Advertisement -
90 வயதில் நடிகை வைஜெயந்திமாலா நடனமாடி அசத்திய காணொலி, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

1949-ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான வாழ்க்கை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் வைஜெயந்திமாலா. வஞ்சிக்கோட்டை வாலிபன், படத்தில் கண்ணும் கண்ணும் கலந்து என்ற பாடலில் பத்மினியுடன் இணைந்து அவர் நடனம் ஆடியிருப்பார். இந்த பாடலும், அவர் நடனம் ஆடியதும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. காலத்தால் அழியாக இந்த பாடல் பலரின் விருப்ப பாடலாக இன்று வரை உள்ளது. சினிமாவிற்கு முன்பாக முறைப்படி பரதம் கற்றுக்கொண்ட வைஜெயந்திமாலா, ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், பாலிவுட் சினிமாவிலும்கொடி கட்டி பறந்தவர் ஆவார். அவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்து புகழ் பெற்றவ் ஆவார். சினிமா தாண்டி அரசியலிலும் குதித்து மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டிலும் எம்.பி.யாக பணியாற்றி உள்ளார். பின்னர் அரசியலில் இருந்தும் அவர் ஒதுங்கி விட்டார். அண்மையில் அவருக்கு பத்மவிபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது.
we-r-hiring

இந்நிலையில், அண்மையில் அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் நடிகை வைஜெயந்திமாலா பரதநாட்டியம் ஆடி அசத்தினார். 90 வயதில் அசராமல் பரதம் ஆடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய வைஜெயந்திமாலாவின் நடன வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

MUST READ