Homeசெய்திகள்சினிமாவிரைவில் முடிவுக்கு வரும் வெற்றிமாறனின் 'விடுதலை 2' படப்பிடிப்பு!

விரைவில் முடிவுக்கு வரும் வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படப்பிடிப்பு!

-

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடந்த ஆண்டு சூரி, விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் விடுதலை எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். விரைவில் முடிவுக்கு வரும் வெற்றிமாறனின் 'விடுதலை 2' படப்பிடிப்பு!விடுதலை படத்தின் முதல் பாகமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது. தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் சூரி, விஜய் சேதுபதி தவிர மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார்.விரைவில் முடிவுக்கு வரும் வெற்றிமாறனின் 'விடுதலை 2' படப்பிடிப்பு! ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி பரபரப்பாக நடைபெற்று வரும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்த பாடில்லை. ஏனென்றால் வெற்றிமாறன் ரசிகர்களுக்கு சிறந்ததை வழங்க வேண்டும் என கதையில் சிறு சிறு மாற்றங்களை செய்து வருகிறார். இதன் காரணமாகவே படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நீண்டு கொண்டே போகிறது. விரைவில் முடிவுக்கு வரும் வெற்றிமாறனின் 'விடுதலை 2' படப்பிடிப்பு!இதற்கிடையில் விடுதலை 2 படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவ தொடங்கியுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் முடிவடையாத நிலையில் தீபாவளிக்கு எப்படி படம் ரிலீஸ் ஆகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பூந்தமல்லி பகுதியில் விடுதலை 2 படத்திற்காக செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் அதன் பிறகு முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விரைவில் முடிவுக்கு வரும் வெற்றிமாறனின் 'விடுதலை 2' படப்பிடிப்பு! மேலும் வெற்றிமாறன், ஏற்கனவே நடந்து முடிந்த படப்பிடிப்புகளுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து விட்டாராம். எனவே மீதமுள்ள 10 நாட்களும் படப்பிடிப்பும் மற்றும் அதற்குண்டான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டால் விடுதலை 2 படம் முழுவதும் நிறைவடைந்து விடும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் 2024 தீபாவளி ரிலீஸுக்கு விடுதலை 2 திரைப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ