Homeசெய்திகள்சினிமாஇரண்டாம் பாகத்திலும் முடிவுக்கு வராத வெற்றிமாறனின் 'விடுதலை'......... மூன்றாம் பாகமும் வருமா?

இரண்டாம் பாகத்திலும் முடிவுக்கு வராத வெற்றிமாறனின் ‘விடுதலை’……… மூன்றாம் பாகமும் வருமா?

-

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். இரண்டாம் பாகத்திலும் முடிவுக்கு வராத வெற்றிமாறனின் 'விடுதலை'......... மூன்றாம் பாகமும் வருமா?இவர் கடந்த ஆண்டில் வெளியான விடுதலை எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். விடுதலை படத்தின் முதல் பாகமாக வெளியாகி இருந்த இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருந்த பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. இரண்டாம் பாகத்திலும் முடிவுக்கு வராத வெற்றிமாறனின் 'விடுதலை'......... மூன்றாம் பாகமும் வருமா?எனவே இதைத்தொடர்ந்து வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோரின் கூட்டணியில் விடுதலை பாகம் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாகவே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து இந்த படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகையினால் இந்த படம் வருகின்ற கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.இரண்டாம் பாகத்திலும் முடிவுக்கு வராத வெற்றிமாறனின் 'விடுதலை'......... மூன்றாம் பாகமும் வருமா? இந்நிலையில் விடுதலை படத்தின் மூன்றாம் பாகமும் வரும் என புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதாவது ஏற்கனவே வெற்றிமாறன், விடுதலை 2 திரைப்படத்தை இயக்கும்போது தொடர்ந்து கதையில் சில மாற்றங்களை செய்ததால் தான் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதாக பலமுறை பல இடங்களில் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் விடுதலை மூன்றாம் பாகமும் வரும் என்ற தகவல் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படமும் தள்ளி போகுமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

MUST READ